SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் பரிதாபம் விமான விபத்தில் தாம்பரம் பைலட் பலி

2018-02-16@ 05:32:02

தாம்பரம்: தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை பைலட் அசாம் விமான விபத்தில் பலியானார்.சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (72), ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.  இவரது மகன் ஜெயபால் ஜேம்ஸ் (47). 1994ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். விமானப்படையில் விங் கமாண்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கிரேஸ் அனிதா (45) என்ற மனைவியும், ரோஷன் (20) என்ற மகனும், ரேஷ்மி (18) என்ற மகளும் உள்ளனர். இவர்கள், பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.  
ஜெயபால் ஜேம்ஸ் அசாம் மாநிலத்தில் உள்ள மஜூலி ஆற்றுப்படுகை பகுதியில் இருவர் மட்டுமே செல்லும் எஸ்.டபிள்யூ 80 மைக்ரோ லைட் விமானத்தில் நேற்று மதியம் சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியது.   இதில், ஜெயபால் ஜேம்ஸ் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு விங் கமாண்டர் டி.வாட்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் மனிதர்கள் வசிக்காத டர்பார் சோப்ரி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் அசாம் மாநிலம் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்த விமானப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அசாம் மாநில அதிகாரிகள் படகு மூலம் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமான விபத்தில் ஜெயபால் ஜேம்ஸ் பலியான தகவல் கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரது தந்தை ஜெயபாலுக்கு தெரிவிக்கப்பட்டது. கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயபாலை சந்தித்து ஆறுதல் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்