நா.பேட்டை: சேந்தமங்கலம் தொகுதி, பேளுக்குறிச்சியில் இருந்து, பழனியப்பார் கோவில் வரை உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. இந்நிலையில், பேளுக்குறிச்சி - பழனியப்பார் கோவில் சாலை, வெள்ளாளப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தொப்பப்பட்டி ஊராட்சி சாலை என, மூன்று சாலைகளுக்கு, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பணி, பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பணிகளை தொடங்கி வைத்தார்.