நாமக்கல்: நாமக்கல், அரசு மகளிர் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், கடந்த, 12ல் துவங்கிய ஐம்பெரும் விழா, இன்றுடன் நிறைவடைகிறது. நான்காம் நாளான நேற்று, 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் கிரெட்டா மேரி தென்றல் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் அசோகன், மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கினர். பொருளியல் இளங்கலை மாணவி மாதவி தங்கப்பதக்கம் பெற்றார். இளங்கலை மாணவியர், 568; முதுகலை மாணவியர், 698 பேர் பட்டச்சான்று பெற்றனர். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்றனர்.