SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விவகாரம் : மின் ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

2018-02-16@ 00:54:29

சென்னை: திட்டமிட்டபடி இன்று மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் வயர் மேன், ஹெல்ப்பர், போர்மேன் ஆகிய களப்பணியாளர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்க1.12.2015 அன்று 11வது ஊதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒப்பந்தம் போடப்படாமல் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியது.  அதில் தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்கப்பட்ட 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான இறுதி வரைவு நிதித்துறை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க நிதித்துறை மறுத்துவிட்டது. இதனால் ஒப்பந்தம் இழுபறியில் உள்ளது. இதனால் அரசை கண்டித்து சிஐடியு, என்எல்ஓ, பிஎம்எஸ் ஆகிய 3 தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி 23ம்தேதி ஸ்டிரைக் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்தனர்.

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிப்ரவரி 12ம்தேதிக்குள் ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் ஸ்டிரைக் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் ஒப்பந்தம் போடுவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். உடனே கடந்த 9ம் தேதி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சுமதி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தை ேதால்வியில் முடிந்தது.   நேற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், திடீரென அதை ஒத்தி வைப்பதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.

இது தொழிற்சங்கத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக் நடப்பதாக அறிவித்தனர். அதன்படி தமிழகம் மின் வாரிய ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் நோட்டீஸ் அளித்த 3 சங்கங்களை தவிர 7 சிறிய சங்கங்களும் கலந்து ெகாள்கின்றனர்.  இதனால் இன்று மின்சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயர்மேன், போர்மேன் உள்ளிட்ட களப்பணியாளர்கள் அதிக அளவில் ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதால் மின்மாற்றி பராமரிப்பு, மின்வழித்தட பராமரிப்பு, மின் இணைப்பு வழங்குவதல், மின்வயர்கள் பதித்தல் உள்ளிட்ட அத்யாவசிய பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பல மாவட்டங்களில் மின் தடையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 ஸ்டிரைக் குறித்து மின்ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) தலைவர் சுப்பிரமணி கூறுகையில்,‘‘ தற்போது மின்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், எங்கள் கோரிக்கை தொடர்பான எந்த உத்தரவாத்தையும் அவர் அளிக்கவில்லை. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் அரசுக்கு அவகாசம் கொடுத்துவிட்டோம். இனியும் தாமதிப்பதை ஏற்க முடியாது. வேறு வழியில்லாமல் இன்று ஸ்டிரைக் நடத்துகிறோம். இதில் 40ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும்’’

மின்சாரத்தை நிறுத்தினால்... அமைச்சர் மிரட்டல் :

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக மின்வாரியத்தில் மொத்தம் 17 தொழிற்சங்கங்கள் உள்ளன. இதில், தொமுச உட்பட 14 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். 3 சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. பணிச்சுமை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வரும் திங்கள், செவ்வாய்கிழமைக்குள் முடிந்துவிடும்.

இதையடுத்து, புதன்கிழமை முதல் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்த வாரத்துக்குள் முழு அளவில் சுமூகமான முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு செய்வதற்கு அரசும் தயாராக இருக்கிறது. எனவே 3 சங்கங்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் அழைக்கிறேன். அவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் நாங்கள் வருத்தப்படவில்லை. மீண்டும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்களானால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் மின்தடை ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு வர வேண்டாம். மின்தடை எங்கும் இருக்காது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.  மின்சாரம் வழங்குவதில் எந்தவித இடையூறும் இருக்காது. நாளைய வேலை நிறுத்தத்தின் போது ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினால் எந்த பிரச்னையும் இருக்காது.  ஆனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மின்சாரம் தடை செய்வது உள்ளிட்டவைகளை செய்தால் அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாது. ஒரு வாரத்துக்குள் அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்து ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.  
என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்