மேலுார்;மேலுார் தினசரி சந்தை உட்பட 11 இனங்களுக்கான பொது ஏலம் நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா தலைமையில் நடந்தது. ஆர்.ஐ., செந்தில்குமார் நடத்தினார்.அ.தி.மு.க., சார்பில் பதினெட்டாங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுச்சாமிதலைமையிலும், தினகரன் தரப்பில் முன்னாள் நகராட்சி சேர்மன் சரவணன் தலைமையிலும் ஏலம் கேட்கப்பட்டது.
11 இனங்களில் 5 இனங்கள் 1 கோடியே 7லட்சத்து 93, 500க்கு ஏலம் விடப்பட்டது. அ.தி.மு.க., ஏலம் எடுத்தது. மீதமுள்ள 6 இனங்களுக்கு ஏலம் கேட்கஆளில்லாததால் மறு ஏலம் போட உள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.
தினசரி காய்கறி சந்தை மட்டும் கடந்த ஆண்டு 44.16 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டஏலம், இந்த ஆண்டு இரு அணியினரிடையே கடும் போட்டி நிலவியதால் ஒரு கோடி ரூபாயை தாண்டியது.இதற்கிடையே ஏலம் விபரம் குறித்த அறிவிப்பு மற்றும் வழக்கமான வேலைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு இல்லை என பா.ஜ., நகர் துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.