SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநின்றவூரில் ஓடும் ரயிலில் தகராறு : கல்லூரி மாணவனுக்கு வெட்டு

2018-02-16@ 01:28:43

திருநின்றவூர்: திருநின்றவூரில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவனை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த அண்ணனூர் அந்தோணி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர், திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை தேர்வு எழுத ரஞ்சித் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகே வந்தபோது ரஞ்சித்தை 4 வாலிபர்கள் வழிமறித்து, பட்டாக்கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைபார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவன் ரஞ்சித் ரயிலில் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தபோது அதே ரயிலில் பயணம் செய்த திருநின்றவூர், நடுக்குத்தகையை சேர்ந்த சந்தோஷ்குமார் (20) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சித்தை வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான ஆகாஷ் (20), யோகேஷ் (19), விக்னேஷ் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 பட்டாக் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்