காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் | சுசாந்த் சிங்கை இயக்கும் சதீஷ் கவுசிக் | சைக்கோ த்ரில்லர் படத்தில் கங்கனா | அப்பா வாழ்க்கையை படமாக எடுக்க மாட்டேன் : டிவிங்கிள் கண்ணா |
கிட்டத்தட்ட சினிமாவை விட்டு விலகி இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிசியான நடிகை ஆகிவிட்டார். தற்போது அவர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருகிறார். சற்குணம் இயக்கத்தில் விமலுடன் கே2 (களவாணி 2ம் பாகம்) படத்தில் நடிக்கிறார். இதுதவிர அவர் நடித்து முடித்துள்ள சீனி என்ற படமும் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் அவர். "90 எம்.எல்" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். குவார்ட்டர் சரக்கில் பாதியை 90 எம்.எல் என்பார்கள் குடிமகன்கள். அதையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதுப் இயக்குகிறார், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
மரண மட்டை என்கிற குடி சம்பந்தமான பாடல் வெளியிட்ட சிம்பு, அதில் ஓவியாவையும் பாட வைத்திருந்தார். இப்போது அவரே ஓவியாவின் 90 எம்.எல்., படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஆஹா என்ன ஒரு கூட்டணி.?!