SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலத்தின் கட்டாயம்

2018-02-16@ 00:06:43

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட  பொறியியல் கல்லூரிகளில், முதல்பருவத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் அதிர்ச்சி தரும் விஷயம், 40 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பதுதான். இதேபோல், 143 கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் மிக மோசம். கல்வித்தரம் குறைந்து வருகிறதா அல்லது மாணவர்களின் கற்கும் திறன் மங்கிவிட்டதா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உருமாறி உள்ளது.

பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள் மிக கடினமான பாடத் திட்டங்களை கொண்டவை. இவற்றில் மனப்பாடம் மட்டும் செய்து தேர்வு எழுதுவது என்பது இயலாத காரியம். அதாவது பாடத்தை பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே, தேர்வில் வெற்றி பெற முடியும். ஆனால், நம்முடைய பள்ளி கல்வி முறை என்பது, வெறும் மனப்பாடத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது.

ஒரு மாணவர் நன்கு மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்தால், பனிரெண்டாம் வகுப்பு வரையில், அவரால் மிக எளிதாக வெற்றி பெற முடியும். அதிக மனப்பாட திறன் பெற்றிருந்தால், முதல் மதிப்பெண் கூட பெற முடியும். ஆனால், உயர்க்கல்விக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்கிறோமா என்றால், மிகப்பெரிய கேள்விக்குறிதான் நம் முன் நிற்கிறது.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட, உயர்க்கல்வியில் திக்கித்திணறுவதாக பேராசிரியர்கள் பலர் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் தெரிவிக்கும் முக்கிய காரணம், மனப்பாட அடிப்படையிலான கல்வி முறையை மாற்ற வேண்டும் என்பதுதான். இதனால் மாணவர்களால் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
உயர்க் கல்விக்கேற்ப மாணவர்களை தயார் செய்யாவிட்டால், மாணவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாவதுடன், அதன் மூலம் அரசுக்கும் மறைமுக பாதிப்புகள் ஏற்படுகின்றன. விளைவுகள் எதிர்மறையாக இருப்பதுதான் இங்கு கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

தற்போது மத்திய பாடத்திட்டத்தில் மனப்பாட முறையை மாற்றி செயல்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோன்று மாநில பாடத்திட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியமானது. நாட்டில் பொறியியல் பட்டதாரிகளையும், மருத்துவர்களையும் உருவாக்குவதில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம், அப்பெருமையை இழப்பதற்குள் நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் காட்டாயம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்