முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக இயங்கி வந்த, ஆயுத தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், அதை அழித்தனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையை, போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 12 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.மேலும், இந்த சோதனையில், ஹரியானா மாநிலம் பானிபட் மற்றும் சோனிபட் பகுதிகளுக்கு, சட்ட விரோதமாக ஆயுதம் சப்ளை செய்த இருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினர்.