SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைதான 3 நக்சலைட்டுகளுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் : போலீஸ் விசாரணைக்கு அனுமதி மறுப்பு

2018-02-16@ 00:48:47

சென்னை: திருவள்ளூரில் கைதான நக்சலைட்டுகள் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸ் விசாரணைக்கு அனுமதி மறுத்த நீதிபதி, அவர்களை வரும் 21ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் கடந்த 9ம் தேதி வெற்றி வீரபாண்டியன் என்பவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்திய நக்சலைட் தசரதன், அவரது மனைவி செண்பகவல்லி ஆகியோரை மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். தசரதனின் அண்ணன் வெற்றி வீரபாண்டியனையும் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் க்யூ பிரிவு எஸ்.பி., விக்ரமனும் விசாரணை நடத்தினார்.

அதில், ‘திருவள்ளூரில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பயிற்சி அளிக்க முடிவு செய்தது தெரிந்தது. மூவரையும் போலீசார், கடந்த 10ம் தேதி திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், நேற்று மதியம் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் மூன்று பேரும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். அங்கு, நீதிபதி டி.இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவர்கள் மூவரையும் வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். இதற்கு நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து மூவரையும் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் கோஷம்;

நக்சலைட் தசரதன், நீதிமன்றத்துக்குள் செல்லும்போது, ‘மத்திய அரசே, மத்திய அரசே ஜிஎஸ்டியை திரும்ப பெறு’ ‘நக்சலைட்டுகள் தேச பக்தர்கள், அரசியல் கட்சிகள் தேச துரோகிகள்’ ‘போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே’ ‘நக்சலைட்டுகள் போராட்டம் வெல்லட்டும்’ என கோஷமிட்டார்.நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர் கூறுகையில், ‘கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே நக்சலைட்டுகளுடன் தொடர்பு இல்லாத நிலையில் என்னை போலீசார் கைது செய்துள்ளனர்’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • Kolkatamasswedding

    கொல்கத்தாவில் பிரமாண்ட திருமண விழா: 160 தம்பதிகள் பங்கேற்பு

  • 30feetdeepditchcarsfell

    ரோமில் திடீரென 30 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளம்: கார்களுடன் தெரு சரிந்து பள்ளத்தில் விழுந்தது

  • Glassbridgechina

    6,500 அடி உயரத்தில் கண்ணாடி தொங்கு பாலம்: சொந்த சாதனையை முறியடித்த சீனா

  • ThiruvallikinaiParthasarathy

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தெப்ப திருவிழா

  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்