திருச்செங்கோடு: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த, தீவட்டிபட்டியைச் சேர்ந்த வையாபுரி மகன் பாலசுப்ரமணியன், 20; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில், இ.சி.இ., மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று, அரியர் தேர்வு எழுத, அண்ணா நகரில் உள்ள நண்பரின் அறையில் இருந்து, மதியம், 1:00 மணியளவில், வோக்ஸ்வேகன் காரில் கல்லூரிக்கு சென்றார். அதிவேகமாக சென்றவர், வரப்பாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதினார். கார் அப்பளமாக நொறுங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் இன்ஜின், 100 மீட்டர் தள்ளி, சாலை எதிர்ப்புறமாக விழுந்தது. திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.