ஒசூர்: சூளகிரி அருகே, பால் வியாபாரியிடம், கத்தியை காட்டி மிரட்டி, பணம் வழிப்பறி செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அடுத்த, காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், 25, பால் வியாபாரி. இவர் கடந்த மாதம், 16ல், பால் விற்பனை செய்வதற்காக, ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். காமன்தொட்டி அருகே, அவரை வழிமறித்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து, சூளகிரி போலீசில் ஆனந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆனந்தனிடம் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த உத்தனப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 25, ஓசூர் இம்ரான்கான், 21, முரளி, 21, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.