SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வக்கீல் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது : நீதிபதி கிருபாகரன் வேதனை

2018-02-16@ 00:53:14

சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக வக்கீல் தொழில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்று நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் புதிய விதிமுறைகள் தொடர்பான வழக்கு கடந்த வாரம் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வக்கீல்கள் சந்திரசேகரன், தமிழரசன், முத்துராமலிங்கம் ஆகியோர் நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று ஆஜராகி, பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (நேற்று) முடிகிறது, அதனால் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கோரினர். இதைக்கேட்ட நீதிபதி, வெள்ளிக்கிழமை மதியம் 2-15 மணிக்கு தீர்ப்பளிக்கிறேன். இந்த வழக்குக்காக கடந்த சில நாட்கள் செலவு செய்துள்ளேன். ஆனால் வக்கீல்கள் தங்கள் தொழிலின் மதிப்பை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழில் முழுவதுமாக சீரழிந்துவிட்டது. தங்கள் பைகளை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். இப்போது, இங்கு வந்திருக்கிறீர்களே இதுவரை எங்கே போனீர்கள். தேர்தல் வந்தால் மட்டும் உங்களுக்கு கோர்ட் உத்தரவு வேண்டும்.தனது கிளைண்டை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்கிறீர்கள். போலீசாரை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள், உங்கள் தவறுகளை பார்ப்பதில்லை. வக்கீல் சமுதாயத்தை காக்க ஏதாவது செய்யுங்கள் என்றார்.

ஐகோர்ட் கதி என்ன: நீதிபதி கிருபாகரன் மேலும் கூறுகையில், எட்டாம் வகுப்பையே தாண்டாத ஒருவர்  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்று வக்கீலாகி வக்கீல்  சங்கமும் ஆரம்பித்துள்ளார். அவருக்கு பாரிமுனையில் மிகப் பெரிய கட்டவுட்,  அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் புகைப்படமும் உள்ளது. ஓய்வு பெற்ற சில நீதிபதிகளும் இதுபோன்ற வக்கீல்களுக்கு துணையாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. இங்கு மட்டும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு இல்லையென்றால் உயர் நீதிமன்றம் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். இப்போது எனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. அது இசட் பிரிவாக மாறியிருக்கும். அந்த அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்