சென்னை: காவிரி பிரச்னையை பொறுத்த வரையில் நதிகள் இணைப்புதான் நிரந்தர தீர்வாக அமையும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே வஞ்சனை பார்க்காமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எந்த நதி நீரும் மாநிலங்களுக்கு சொந்தமில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழக மக்களால் ஏற்கமுடியாத தீர்ப்பாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.