மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இதுகுறித்து அவர்கள் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை என்றபோதும், தங்களது பிறந்த நாளை வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த புகைப்படங்களை அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி14-ந்தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவரும் காதலர் தினம் கொண்டாடியுள்ளனர். இருவரும் கைகோர்த்தபடி ரொமான்ட்டிக்காக இருக்கும் போட்டோவை நயன்தாரா தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டோவில் விக்னேஷ் சிவன் அணிந்துள்ள உடையில் வி என்ற எழுத்தும், நயன்தாரா அணிந்துள்ள உடையில் என் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.