பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் | சுசாந்த் சிங்கை இயக்கும் சதீஷ் கவுசிக் | சைக்கோ த்ரில்லர் படத்தில் கங்கனா |
சென்னை : காவிவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இதை வைத்து யாரும் ஓட்டு அரசியல் செய்ய வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்...
ஏமாற்றம்
ஆடு தாண்டும் காவிரி, ஆகன்ற காவிரியாவது தமிழகத்தில் தான். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் ஒரு மன நிம்மதி உள்ளது. மனிதர்கள் குரங்காக இருந்தபோதே காவிரி ஓடியது. காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் கோபத்தில் சொன்னேன், அதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்திருப்பது ஆறுதலாக உள்ளது.
பத்திரப்படுத்த வேண்டும்
தமிழகத்திற்கு குறைந்தளவு தண்ணீர் கிடைத்தாலும், அதை தமிழர்கள் பத்திரப்படுத்த வேண்டும். கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும், மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டு அரசியல் வேண்டாம்
ஓட்டு அரசியலுக்காக தேசியத்தை சிலர் மறந்து சச்சரவுகளை தூண்டுவதை தடுக்க வேண்டும். தண்ணீர் என்பது இருவருக்கும் சொந்தம், அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஓட்டு விளையாட்டுக்காக சச்சரவுகளை தூண்டக்கூடாது. ஓட்டப்பம் வீட்டை சுடும். இது இருமாநிலத்துக்கும் பொருந்தும்.
ஒற்றுமை தேவை
ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பது தீர்வாகாது. இரு மாநில அரசுகளும், விவசாயிகளுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் நதிகள் இணைப்பு உள்ளிட்டவைகள் பற்றியெல்லாம் பேச முடியும்.
இவ்வாறு கமல் கூறினார்.