புதுடில்லி: பா.ஜ.கூட்டணி என்பது தவறான தகவல் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
ஓடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நவீ்ன்பட்நாயக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து பேசியதை வைத்து ஒடிசாவில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு அச்சாரமாக மோடியை பட்நாயக் சந்தித்துள்ளதாக உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
இது குறித்து நவீன் பட்நாயக் கூறியது, புத்தக வெளியீடு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அரசியல் பேசவில்லை. பா.ஜ.வுடன் கூட்டணி என்பது தவறான தகவல். கூட்டணி விஷயத்தில் காங். கட்சியாக இருந்தாலும் பா.ஜ.வாக இருந்தாலும் இரு தேசிய கட்சிகளையும் சம தூரத்தில் வைத்து தான் பார்ப்போம். ஒடிசாவின் மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எனது தலைமையிலான அரசு செய்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.