காத்மாண்டு: நேபாளப் பிரதமராக, இடதுசாரி கூட்டணியின் தலைவர், கே.பி.சர்மா ஒலி, நேற்று பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
நேபாளத்தில், பார்லிமென்ட் மற்றும் மேல்சபைக்கான தேர்தல், சமீபத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் கே.பி.ஒலி, 65; தலைமையிலான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், முன்னாள் பிரதமர் பிரசண்டா தலைமையிலான, மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றன. இதில் சர்மா ஒலி, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.