சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கு காவிரியில் 14.75 டிஎம்சி தண்ணீர் குறைப்பு என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு வேதனையளிக்கிறது. கருணாநிதி பெற்று தந்த உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்துள்ளது. இது தமிழகத்தில் நடக்கும் குதிரைபேர ஆட்சியின் அலட்சியத்தால், சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் முறையாக அணுகாமல் கோட்டை விட்டுள்ளனர். கர்நாடகாவுக்கு நீதி;தமிழகத்திற்கு அநீதி கிடைத்துள்ளது.
அனைத்து கட்சி, விவசாய சங்க பிரதிநிதிகள் அவசர கூட்டத்தை கூட்டி, இதற்கு என்ன முடிவெடுக்கலாம், எப்படி அணுகுவது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் பயனிருக்காது. அதிமுக கலந்து கொள்ளும் என்றால் கூட்டுகிறோம். கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், துரோகம் யார் செய்தது என்பது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.