SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1.12 கோடி மோசடி புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்கு பதிவு செய்யலாம் : போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

2018-02-16@ 01:20:26

சென்னை: 1.12 கோடி மோசடி புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரியான ராமச்சந்திரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இந்த பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். பேரவை செலவுகளுக்காகவும், கட்சி அலுவலக புனரமைப்பு செலவுகளுக்காகவும், ஜெ.தீபாவின் குடும்ப செலவுகளுக்காகவும் பணம் வேண்டுமென தீபா மற்றும் அவரது உதவியாளர் ஏ.வி.ராஜா ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக 1 கோடியே 12 லட்சம் வரை என்னிடம் வாங்கினார்கள்.  பணத்தை திரும்ப கேட்டபோதுஇருவரும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்துமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்