மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவியிடம், ரஜினி - கமலின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி எனது நல்ல நண்பர், நல்லவர். அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறேன். சிஸ்டத்தை சரி செய்ய போகிறேன் என்கிறார். கர்நாடகாவில் போய் முதலில் சரி செய்யட்டும். தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.
கமல் பற்றி பேசும்போது, அவர் பெரிய மனிதர். அவர் பேசுவது படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். காவி, கருப்பு என ஏதோ கலர்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். எனக்கு புரியவில்லை என்றார்.