புளோரிடாவில் பள்ளிக்குள் புகுந்து பயங்கர துப்பாக்கிச் சூடு : பள்ளி மாணவர்கள் 17 பேர் உயிரிழப்பு

2018-02-15@ 08:29:32

வாஷிங்க்டன் : அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவில் பள்ளி ஒன்றில் புகுந்து கண்மமூடித்தனமாக 19 வயது இளைஞன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர். பார்க்லாந்தில் உள்ள ஸ்டோனெமன் டக்ளஸ் உயர்நிலை உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த நிகோலஸ் குரூஸ் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பதாக வெளியேற்றினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. ஒழுக்கமின்மை காரணமாக பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தால் ஸ்டோனெமன் டக்ளஸ் உயர்நிலை பள்ளி  மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!