சென்னை : தமிழகத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திமுக செயத்தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார் . செயின் பறிப்பு சம்பவ வீடியோக்கள், பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.