மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியினால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், வில்லன் போன்றதொரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல சந்தீப்கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம்.
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் மாசிடோனியா (Macedonia) என்ற நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் படம் வெற்றியடைந்ததால் தன்னுடைய நடவடிக்கை தொடங்கி, பிலிம் மேக்கிங் வரை எல்லாவற்றிலும் ஹை பையாக இருக்கிறார் கார்த்திக் நரேன்.