மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
கபாலி படத்தையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' ஏப்ரல 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர். 'காலா'வின் ரிலீஸ் தேதி குறித்துவிட்ட நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன் 'காலா' படத்தின் அறிமுக காட்சிக்கு எந்த மாதிரியான இசை வேண்டும் என்று ரசிகர்களிடமே கேள்விகளை முன் வைத்து ஓட்டெடுப்பு வைத்துள்ளார். ஒரு இசை அமைப்பாளர் தான் இசை அமைக்கும் படத்தில் எப்படிப்பட்ட அறிமுக பாடல் மற்றும் ட்யூன் வேண்டும் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்பது இதுவே முதல் முறை என்று அவரை சிலர் பாராட்டியுள்ளனர்.
உண்மையில் காலா படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். இன்னும் சில தினங்களில் படத்தின் பர்ஸ்ட்காப்பியே தயாராகிவிடுமாம்.