SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டிடம் கட்டியதிலும் முறைகேடு :முன்னாள் துணைவேந்தரிடம் விசாரணை

2018-02-15@ 00:59:11

கோவை: பாரதியார் பல்கலையில் கட்டுமான பணிகளில் நடந்த முறைகேடு குறித்து, துணைவேந்தர் கணபதியிடம் போலீசார் விசாரித்தனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய கணபதி (67), பேராசிரியர் தர்மராஜ் (56) ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டனர். கடந்த 12ம்தேதி கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கஸ்டடி எடுத்தனர். இவரிடம் போலீசார் பல்வேறு ஆதாரங்களை சேகரிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையில் கிழித்து போடப்பட்ட பணத்தை தவிர வேறு பணம் எதுவும் கணபதியிடம் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்ய முடியவில்லை. லஞ்சமாக வாங்கிய 29 லட்ச ரூபாய்க்கான செக் எங்கே போனது என தெரியவில்லை. துணைவேந்தரின் அசையும், அசையா சொத்து, வங்கி கணக்குகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கோவை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ெடபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கான ஆதாரங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்துள்ளது. 5 கோடி ரூபாய்க்கு பல்வேறு தளவாட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. நீச்சல் குளம், விடுதி கட்டிடம், உள் அரங்க மைதானம், மைதானம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திட்ட மதிப்பீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது.

பல்கலைக்கழகத்திற்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், பாட புத்தகம், வினாத்தாள் கொள்முதல் குறித்தும் விசாரிக்கப்பட்டது. டெண்டர் வெளியீடு, ஒப்பந்த நிறுவனம் தொடர்பான விசாரணைக்கு கணபதி சரியான பதில் தரவில்லை. மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இடைதரகர்களாக உள்ளவர்களின் விவரங்களையும் கணபதி வெளியிட மறுத்து விட்டார். கடந்த 3 நாள் நடந்த விசாரணையில் பெரும்பாலான கேள்விகளை கணபதி கண்டுகொள்ளவில்லை. மனம், உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் விசாரிக்கவேண்டியிருப்பதால் போலீசாரால் உரிய தகவல்களையும், ஆதாரங்களையும் முழுமையாக பெற முடியவில்லை. போலீசார் சேகரித்த ஆதாரங்களை காட்டி விசாரித்த போதும் கணபதி அமைதியாக இருந்துள்ளார்.
 84 பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, பணம் வாங்கியது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த புகார் மனுக்களையும் போலீசார் கணபதியிடம் காட்டினர். ஆனால் அவர் அது ெதாடர்பாக எந்த கருத்தும் கூறவில்லை. எனவே, போலீஸ் காவல் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் போலீசார் தவிப்படைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்