SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக விரோத செயல்களை தடுக்க நாகர்கோவில் பூங்காவை சுற்றி கிரில் கேட்

2018-02-15@ 21:03:18

நாகர்கோவில்: நாகர்கோவில் பூங்கா சுற்றுசுவரை இடித்து விட்டு, முழுவதும் இரும்பு கம்பிகள் அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் நகரில் உள்ள ஒரு பொழுது போக்கு அம்சமாக தற்போது வேப்பமூடு பகுதியில் உள்ள பூங்கா அமைந்துள்ளது. நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் மிக் 21 ரக போர் விமானம் காட்சிக்கு உள்ளது. இது தவிர குழந்தைகள் விளையாடுவதற்காக  இரும்பிலான ஊஞ்சல் உள்ளிட்ட சில உபகரணங்கள் உள்ளன. அவையும் முறையாக பராமரிப்பில்லாததால் குழந்தைகள் அதை மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியாது. ஓகி புயலில் சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பத்தை கூட அகற்றாமல் போட்டுள்ளனர். இருப்பினும்  பூங்காவுக்கு பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பூங்காவில் பகல் வேளையில் பொதுமக்கள் போர்வையில் வரும் கும்பல் சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பூங்காவுக்குள் மறைமுகமாக உள்ள பகுதிக்கு சென்று மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இது தவிர சில காதல் ஜோடிகள் பொழுது போக்கிற்காக வந்து அமர்ந்து, அத்துமீறும் செய்கைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதே போல் லெஸ்பியன், ஹோமோ செக்ஸ் போன்றவையும் பூங்காவுக்குள் நடந்து வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே பூங்காவின் ஒரு பகுதியில் சுற்று சுவரை இடித்து விட்டு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த பகுதியில் அமர்ந்து இருப்பவர்களை சாலையில் செல்பவர்கள் பார்க்க முடியும். இது போன்று பூங்கா சுற்றுசுவர் முழுமையாக அகற்றப்பட்டு, இரும்பு கம்பிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகளுக்காக  சுற்றுசுவரை இடிக்கும் பணிகள் நேற்று நடந்தன. இரும்பு கம்பி வேலி அமைப்பதன் மூலம் பூங்காவுக்குள் உள்ள மக்கள் நடமாட்டம் வெளியே தெரியும் என்றும், இதன் மூலம் சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பூங்கா பராமரிப்பு நகராட்சி வசம் வந்த பின்னர் தான் மிகவும் மோசமாக மாறி விட்டன. பொழுதுபோக்கு என்று கூறும் அளவுக்கு எதுவும் இல்லை.  ராட்டினங்கள், இசை நீருற்று, ஒளி, ஒலி கூடம் போன்றவை முறையாக பராமரிக்கப்பட்டு வந்திருந்தால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும். கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் எந்த வித வசதியும் நகராட்சி செய்து கொடுக்க வில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம் ஆகும் என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்