SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வால்பாறை அருகே சிறுவனை கொன்ற சிறுத்தை சிக்கியது

2018-02-15@ 01:04:59

வால்பாறை: வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை நேற்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் முத்தலி. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் இப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சையதலி(4). கடந்த 8ம் தேதி இரவு 7 மணி அளவில் சமையல் அறைக்குள் சிறுத்தை புகுந்து சிறுவனை தூக்கி சென்றது. சிறிதுதூரத்தில் அவனை கடித்து கொன்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க நடுமலை எஸ்டேட்டில் ஒரு கூண்டும், வால்பாறை டவுன் பகுதியில் 2 கூண்டுகளும் வனத்துறையினர் வைத்தனர். கூண்டுகளை வனவர் கோபால் மற்றும் வனத்துறை ஊழியர்கள் 3 சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தனர். நடுமலையில் வைத்த கூண்டில், நேற்று அதிகாலை ஆண் சிறுத்தை சிக்கியது. சிறுத்தை சிக்கிய கூண்டுடன் வனத்துறை லாரியில் வைத்து கொண்டு சென்றனர். பிறகு, டாப்சிலிப்பை அடுத்த வரகழியாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று நேற்று மாலை சிறுத்தையை விடுவித்தனர். சிறுத்தை நல்ல உடல் நலத்துடன் விடுவிக்கப்பட்டதாக வனத்துறையினர் கூறினர்.ஆனாலும், இது சிறுவனை கடித்து கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை தானா என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. நகரில் உலா வந்தபோது கேமராவில் சிக்கிய சிறுத்தையும், பிடிபட்ட சிறுத்தையும் ஒன்று என சிறுத்தையின் தோலில் உள்ள புள்ளிகளை வைத்து வனத்துறை உறுதிசெய்துள்ளனர்.

நடுமலை எஸ்டேட்டில் 2 சிறுத்தைகள் ஜோடியாக உலவி வந்ததாகவும், அதில் ஆண் சிறுத்தை மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில் பெண் சிறுத்தை பதுங்கி உள்ளதாகவும் தோட்ட அலுவலர் நேற்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதையும் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, வால்பாறை டவுனில் புதிய ஜுபிலி பாலம் அருகில் ஒன்றும், வால்பாறை மெயின்ரோட்டில் உள்ள தேவாலயம் ஒன்றின் பின்புறமும் பெண் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்