புதுடில்லி: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம், கடந்த மாதம் 25-ந் தேதி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சம்பளத்தை போலவே, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும் இது பொருந்தும்.