SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டியது : பீச், பார்க், ரிசார்ட்டில் அலைமோதிய ஜோடிகள்

2018-02-15@ 00:39:10

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று கடற்கரை, பூங்கா, ரிசார்ட் போன்ற இடங்களில் காதலர்கள் கூட்டம் அலைமோதியது. உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி (நேற்று) காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினமான நேற்று பலர் பல நாட்களாக மனதுக்குள் மறைத்து வைத்திருந்த தனது காதலை மனதுக்கு பிடித்த ஆண், பெண்ணிடம் இருவரும் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது ஒரு ரகம் இருக்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்வார்கள்.

மேலும், காதலர் தினத்தின் அடையாளமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். சிலர் விரும்பிய இடங்கள், விரும்பிய பொருட்கள் கிப்ட், சாக்லேட், ரோஜா பூ போன்றவற்றை பரிசாக வழங்குவார்கள்.  காலம் தொழில் நுட்பம் வளர வளர காதலர் தினம் கொண்டாட்டமும் வளர்ந்து வருகிறது. இப்போது சமூக வலைதளங்கள் மூலம் பலர் தங்களது காதலை பலவித ரசனைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று பலர் காதல் தினத்தை பல நிறத்தில் சட்டைகளை அணிந்து  வெளிப்படுத்தினர். உதாரணமாக பச்சை நிற ஆடை அணிந்திருந்தால், காதலுக்காக காத்திருக்கிறேன், நீல நிறம் காதல் வரவேற்கப்படுகிறது, சிவப்பு நிறம் ஏற்கனவே காதலில் உள்ளேன், ஆரஞ்ச் காதலை சொல்லப்போகிறேன், பிங்க் காதல் ஏற்றுக்கொள்ளப்படும், கிரே காதலில் விருப்பம் இல்லை, மஞ்சள் காதல் முறிவு என வலைதளங்களில் செய்திகள் பரவியதால் நேற்று பலர் அதற்கு ஏற்ப ஆடைகளை அணிந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.

கல்லூரி இளசுகள் தங்களது காதலிகளுக்கு பரிசளிக்க பூக்கடை, கிப்ட் ஷாப் என குவிந்தனர். இதனால், கிப்ட் ஷாப், பூக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் திரையரங்குகள், பீச் பார்க் எனவும் காதலர் தினம் களைகட்டியது.  சில ஓட்டல்கள், மால்கள், கேக் ஷாப்களில் காதலர் தினம் கொண் டாட சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரையில் காதலர்கள் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை மற்றும் பூங்காக்களில் கூடி தங்களது காதலை வெளிப்படுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • AgriculturalSemi

    சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்