கௌதம் மேனனுடன் ராசியாகும் சூர்யா | ஒருவழியாக வெளியான ஓவியா படம் | 'நாச்சியார்'-ஐ நம்பும் ஜிவி பிரகாஷ் | ராம்கோபால் வர்மா பாராட்டிய 'ரங்கஸ்தலம்' | மற்ற மொழி நடிகைகளைத் திட்டும் 'மா' தலைவர் | ஒரே டேக்கில் அசத்திய பிரியா வாரியர்..! | சீனியர் நடிகைக்கு 5௦ஆம் ஆண்டு விழா எடுத்த மலையாள திரையுலகம் | கணவரால் சங்கடத்திற்கு ஆளாகும் நடிகை | தீவண்டிக்கு வாழ்த்து சொன்ன டிடி, பாலாஜி | 55 நாட்களில் சிவக்குமா வானம்? |
'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் பாடலான 'மாணிக்க மலராய பூவே...' என்ற பாடல் வீடியோ யு-டியூபில் வெளியான ஒருவாரத்தில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து இப்போதும் டிரெண்டாகி வருகிறது.
இந்தபாடலில் ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது ப்ரியா வாரியர் என்ற பெண் தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பார்வை தான் அந்த வீடியோவின் ஹைலைட். அதனாலேயே சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த வீடியோவை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பார்த்து கமெண்ட் செய்தனர். தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் இந்த வீடியா குறித்து ''சமீப காலத்தில் நான் பார்த்த வீடியோக்களில் இது ரொம்பவும் 'க்யூட்'டான வீடியோ' என்றும் 'எளிமை' தான் இந்த வீடியோவின் ஹைலைட்' என்று டுவீட் செய்திரு;நதார்.
இது போன்ற கமெண்டுகள் ஒரு பக்கம் இந்த வீடியோவிற்கு கிடைத்து வர, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாமக தேடப்பட்டவர் என்ற பெருமையும் பிரியா வாரியருக்கு கிடைத்துள்ளது. அதாவது 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்போது இன்ஸ்டாகிராமில் பிரியாவின் ரசிகர்கள் ஆகியிருக்கிறார்கள். பிரியா வாரியருக்கு கிடைத்த இந்த புகழ் துல்கர் சல்மானை நிச்சயம் வருத்தப்பட வைத்திருக்கும்.
மலையாள திரையுலகை பொறுத்தவரையில் இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையில் அதாவது 19 லட்சம் பாலோயர்களை வைத்திருப்பவர் நடிகர் துல்கர் சல்மான் தான். இந்நிலையில் பிரியா வாரியர் நான்கு நாட்களில் துல்கர் சல்மானின் சாதனையை முறியடித்துவிட்டார்.
துல்கர் நடித்த மலையாளப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படும் நேரத்தில் அவருக்கு இப்படியொரு பின்னடைவு.