பெங்களூரு: பெங்களூரு கட்டட விபத்தில் சிக்கி 3 பேர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து பகுதியில் பெங்களூரு அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.