SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான்ஜேக்கப் உடலில் விஷம் : பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

2018-02-15@ 00:46:32

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் (64). குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவராக இருந்தார்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஜான் ஜேக்கப், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது திடீரென வாந்தி, மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக  குடும்பத்தினர் அவரை நெய்யூரில் உள்ள சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  மரணம் அடைந்தார். ஜான் ஜேக்கப் மரணம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் சென்றதையடுத்து கருங்கல் போலீசார் விசாரித்ததில், ஜான் ேஜக்கப் உடலில் விஷம் கலந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஜான்ஜேக்கப் மகன் டாக்டர் நிவின்சைமன் (30), கருங்கல் போலீசில் அளித்த புகாரில், எனது தந்தை உடல் பலவீனம் அடைந்து வாந்தி எடுத்த நிலையில் நெய்யூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ஜான்ஜேக்கப் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காலை 10 மணியளவில் டாக்டர் பெஞ்சமின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையில் ஜான் ஜேக்கப் உடலில் விஷம் கலந்து இருந்தது உறுதியாகி உள்ளது. விஷ மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதன் மூலம் உயிரிழப்பு நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு என டாக்டர்கள் கூறினர். வழக்கமாக சந்தேகத்துக்குரிய உயிரிழப்புகளில் பிரேத பரிசோதனையின் போது காவல்துறை சார்பில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கப்படும். ஆனால் ஜான் ஜேக்கப் உடல் பிரேத பரிசோதனையின் போது அவ்வாறு எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையை டாக்டர்கள் காவல்துறையினரிடம் வழங்கி உள்ளனர். அதில் உடலில் விஷம் கலந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின் படுவூரில் உள்ள ஜான்ஜேக்கப் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும்  அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் பாகங்கள் ரசாயன பரிசோதனை:

வயிறு, இருதய பகுதி பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு வந்த பின்னரே அது எந்த மாதிரியான விஷ தன்மை என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்