செப்., 7-ல் டிரைவ் ரிலீஸ் | இயக்குநராகிறார் ரிச்சா சத்தா | சாகிப் பீவி 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் ஒரு கன்னி ராசி | ரஜினி கர்நாடகாவில் அரசியல் செய்யட்டும் : ராதாரவி | காதலர் தினத்தில் விவாகரத்து பெற்ற நடிகர் | கௌதம் மேனனுடன் ராசியாகும் சூர்யா | ஒருவழியாக வெளியான ஓவியா படம் | 'நாச்சியார்'-ஐ நம்பும் ஜிவி பிரகாஷ் | ராம்கோபால் வர்மா பாராட்டிய 'ரங்கஸ்தலம்' |
காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சில வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றாலும் மொத்தப் படப்பிடிப்பையும் 55 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது மே மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிவடையுமாம். திட்டமிட்டபடி செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
பொதுவாகவே திட்டமிட்டபடி குறுகியகாலத்தில் படப்பிடிப்பு நடத்துகிறவர் மணிரத்னம். 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்தாலும் தன்னுடைய பாணியில் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.