திண்டுக்கல் 'அரசியலுக்கு வரும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பது போகபோகத்தான் தெரியும்', என திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., இளைஞரணி அணி விழாவில் மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். இதில் ஐ.பெரியசாமி தலைமை வகித்து, பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க., வை வெற்றி பெறச் செய்து, ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும். சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்க ஆதரவு கொடுத்தது பா.ஜ., தான். தற்போது தமிழகத்தில் மறைமுகமாக பா.ஜ. ஆட்சி தான் நடக்கிறது.
தமிழகத்தை துாக்கி நிறுத்தப் போவதாக இரண்டு நடிகர்கள் கிளம்பியுள்ளனர்.
அதில் ஒருவர் காவி அரசியலாக இருந்தால், அவருடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். இவர்களின் நிலை என்னவாகும் என்பதை போக போக தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, ஆண்டிஅம்பலம், செந்தில்குமார், இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன், அவை தலைவர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, ஜோதீஸ்வரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.