திண்டுக்கல், பயங்கரவாதி முகம்மது அனீபா டி.எஸ்.பி., யை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கலெக்டர் அலுவலக முன்னாள் சிரஸ்தார் சாட்சியமளித்தார்.
மதுரைக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011ல் வந்தார். அப்போது பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த முகம்மது அனீபா, வத்தலக்குண்டில் பதுங்கி இருந்தார். கடந்த 2013ல் சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அவரை பிடித்தனர்.
அப்போது அவர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிரஸ்தார் டார்வின் ஜோசப் சாட்சியமளித்தார். வழக்கு விசாரணை வரும் பிப்.19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.