எலச்சிபாளையம்: பெரியமணலி, நாகேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சி பாளையம் ஒன்றியம், பெரியமணலியில் பிரசித்தி பெற்ற சிவகாமியம்மை உடனமர் நாகேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நான்கு கால பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய, விடிய தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.