வவுனியாவில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் மூவரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 4கிலோ கேரளா கஞ்சாவினையும் 10மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிசார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது கணவன் மனைவி மற்றும் இவர்களுடைய நண்பரான மூவரையும் இன்று முற்பகல் 11மணியளவில் கைது செய்துள்ளதாக இவர்களிடமிருந்து 4கிலோ கேரளா கஞ்சாவுடன் 10மில்லி கிராம் ஹெரோயினும் மீட்டுள்ளதாகவும் இவர்கள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள
தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்து தியத்தலாவை ஆதார
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*