நாமக்கல்: நாமக்கல்லில், எரிபொருள் சிக்கனம் குறித்த, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், நாமக்கல்லில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் துவக்கிவைத்தார். மோகனூர் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை வழியாக, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. சமையல் காஸ் உபயோகிக்கும் முறை, சிக்கனம் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. காஸ் ஏஜன்சி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.