வித்தியாசமான வேடத்தில் பூஜா ஹெக்டே | சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கும் நயன்தாரா | கார்த்திக் நரேனின், நாடக மேடை | பாரத்தில் சல்மான் விரும்பும் பாபி தியோல் | செப்., 21-ல் லவ்ராத்திரி ரிலீஸ் | ஐஸ்வர்யா ராயின் ஸ்டைலான லுக் | செப்., 7-ல் டிரைவ் ரிலீஸ் | இயக்குநராகிறார் ரிச்சா சத்தா | சாகிப் பீவி 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் ஒரு கன்னி ராசி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ரிச்சா சத்தா. இவர், விரைவில் குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த குறும்படம் 2025-ம் ஆண்டில் நடக்கும் கதையில் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இப்படம் இருக்குமாம்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், நான் ஏற்கனவே சில குறும்படங்களை தயாரித்துள்ளேன். இப்போது முதன்முறையாக இயக்க உள்ளேன். என் நண்பர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அதை திறம்பட செய்வேன் என்றார்.
இந்த குறும்படத்தில் அலி பாசல் ஆடார் மாலிங், சத்யஜித் டூபே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை விசாகா சிங் தயாரிக்கிறார்.