புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி, மோசடி செய்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவை கொள்ளையடிக்க நிரவ் மோடியின் ஆலோசனைகள்

1. பிரதமர் மோடியை கட்டிப்பிடி
2, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் மோடியுடன் இணைந்து காண வேண்டும்.
இதனை பயன்படுத்தி,
* 12 ஆயிரம் கோடியை திருடலாம்
* மல்லையா போல் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும். அப்போது அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கேள்வி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சுதந்திரத்திற்கு பின் நடந்த மிகப்பெரிய மோசடி இதுவாகும். பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் இந்த மோசடி குறித்து தெரிந்தும் அமைதியாக உள்ளனர். மோசடிக்கு யார் பொறுப்பேற்று கொள்வார்கள்.
சட்டத்தை மீறி நிரவ்மோடி வெளிநாடு தப்பி செல்லும் வகையில், தகவல் அளித்தது யார். இவருக்காக ஒட்டுமொத்த நிர்வாகமும் வேலை பார்த்தள்ளன. பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும். எவ்வளவுபணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
என்ன செய்தது
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த மோசடி 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2014 வரை காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பியுள்ளது.