SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்க அதிபர் ஜுமாவின் நண்பர்கள் இந்திய சகோதரர்கள் கைது

2018-02-15@ 00:07:10

ஜோகன்ஸ்பர்க்,: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவின் நண்பர்களாக கருதப்படும் இந்தியாவை சேர்ந்த குப்தா சகோதரர்களின் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்ட போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2009ல் தென் ஆப்ரிக்க அதிபராக ஜேக்கப் ஜுமா பதவியேற்றார். அவர் அதிபராவதற்கு முன்பு 1999ல் ராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் 783 முறை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.  இதனால் தென் ஆப்ரிக்க அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில், ஜுமாவின் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்பு இருப்பதாக  கருதப்படும், இந்தியாவை சேர்ந்த குப்தா சகோதரர்களின் சாக்சன்வோல்ட் பங்களாவில் போலீசார் ேநற்று அதிகாலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பின்னர், விரேத் பண்ணை முறைகேடு தொடர்பாக மூவரையும் கைது செய்தனர். மேலும், இருவர் சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் குப்தா குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். கடந்த 1993ல் இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு சென்ற குப்தா சகோதரர்களான அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா மற்றும் அஜய் குப்தா மீது ஜுமாவின் ஆட்சியில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்றது மற்றும் அமைச்சர்கள் நியமனத்தில் தலையிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி கெடு
ஜுமா பதவி விலக ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கெடு விதித்துள்ளது. அதற்குள் அவர் பதவி விலகும்பட்சத்தில், துணை அதிபரும் கட்சியின் தலைவருமான சிரில் ராமபோசா புதிய அதிபராக பொறுப்பேற்பார். அப்படி நடக்காவிட்டால், ஜுமா மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்