SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடசந்தூரில் பரபரப்பு : முன்னாள் எம்எல்ஏ வெட்டிக்கொலை

2018-02-15@ 05:51:58

வேடசந்தூர்:  வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே புதுரோட்டை சேர்ந்தவர் ஆண்டிவேல் (70). இவர் கடந்த 2001 - 2006ம் ஆண்டில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இவருக்கு மனைவி ஆண்டாள் மற்றும் மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆண்டிவேலுக்கு சொந்தமான தோட்டம் தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ளது. அவரது வயலில் நடைபெற்று வரும் நெல் அறுவடை பணிகளை பார்வையிட நேற்று முன்தினம் சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று காலையும் வீடு திரும்பாததால், மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி தோட்டத்திற்கு வந்தனர்.

அப்போது மோட்டார் அறையில் ஆண்டிவேல் டவுசர், பனியனுடன் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும், தொடைப்பகுதி மற்றும் வலது காலில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த டிஎஸ்பி சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆண்டிவேல் ஈமு கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வந்தார். இத்தொழில் தொடர்பாக அவருக்கு பலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்