SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெல்மெட் சோதனை நடத்திய எஸ்.ஐ. வாக்கிடாக்கி அபேஸ்

2018-02-15@ 00:55:00

திருச்சி: ஹெல்மெட்  சோதனை நடத்திய சிறப்பு எஸ்ஐயின் வாக்கி டாக்கி திருடு போனது.திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக  இருப்பவர் பழனிசாமி. இவர் கடந்த 1ம் தேதி கே.டி ஜங்ஷன் அருகே ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அபராத தொகை வசூலித்தார். அப்போது அவரிடமிருந்த வாக்கிடாக்கியை போலீஸ் வாகனத்தின் பேனட் மீது வைத்திருந்தார். தொடர்ந்து வேறு இடத்தில் நின்று வாகனங்களை மடக்கி பிடிக்க புறப்பட்டு சென்றார். அப்போது வாகனத்தின் மீது வைத்த வாக்கிடாக்கியை எடுத்து செல்ல மறந்து சென்று விட்டார்.

அதன்பின் சுமார் 1 மணிநேரம் கழித்து வாக்கிடாக்கியை காணாதது குறித்து திடுக்கிட்டு தேடி சென்றார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வாகன ஓட்டிகள் யாராவது, வாக்கிடாக்கியை எடுத்து சென்றார்களா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பணியில் அசட்டையாக இருந்ததற்காக சிறப்பு எஸ்ஐ பழனிசாமிக்கு மெமோ வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்