ரசாயன தாக்குதல் நடத்தியது உண்மை என்றால் சிரியாவை தாக்குவோம்

2018-02-15@ 00:08:53

பாரிஸ்: ‘‘சிரியா மக்கள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தியது நிருபிக்கப்பட்டால் சிரியா அரசு மீது தாக்குதல் நடத்துவோம்’’ என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் எச்சரித்துள்ளார். சிரியாவில் ஜனவரி முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட 6 குளோரின் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதை சிரியா அரசு கடந்த ஜனவரி இறுதியில் மறுத்தது. இந்நிலையில், நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மேக்ரோன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிரியா அரசு தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் மீது சிரியா அரசு ரசாயன ஆயுதங்கை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது நிருபிக்கப்பட்டால் அந்த நாட்டின் மீது பிரான்ஸ் தாக்குதல் நடத்தும். அதே நேரத்தில் தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளுக்கு எதிராக போரிட பிரான்ஸ் முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு ேமக்ரோன் தெரிவித்தார். முன்னதாக, கடந்த 9ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேக்ரோன், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் சிரியா மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது கவலை அளிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
புது வகை அணு ஆயுதம் தயாரிக்கிறது பாகிஸ்தான்
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு சொந்தமான மதரசா, மருத்துவமனை பறிமுதல்
192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் எப்-22க்கு போட்டியாக ஜே-20 போர் விமானம் சீன படையில் சேர்ப்பு
பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை போலீஸ் அதிகாரி கைது இலங்கை அரசு அதிரடி
ஹார்லே டேவிட்சன் பைக்கிற்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதா?
15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை
LatestNews
மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது
01:59
பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது
01:58
மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு
01:27
2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது
00:43
வழிகாட்டி பிரிவுக்கு கூடுதல் பதிவுத்துறை தலைவர் நியமனம்
00:12
அமெரிக்காவில் உளவு தலைமையகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு
00:09