SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் பாஜ கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் 18ல் பிரதமர் திறந்து வைக்கிறார்

2018-02-15@ 19:44:19

புதுடெல்லி: புதுடெல்லியில் பா.ஜ.வின் புதிய தலைமையகத்தை, பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி திறந்து வைக்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ. கட்சியின் தலைமை அலுவலகம் புதுடெல்லி, அசோகா சாலையில் அமைந்துள்ளது. கடந்த, காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கட்சிகளுக்கும் புதிய இடத்தில் தலைமையகம் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய தலைமையகத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், பா.ஜ., புதிய தலைமையகம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த, 2016 ஆகஸ்டில், புதிய தலைமையகத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் மோடி நாட்டினார். பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர், இதில் பங்கேற்க உள்ளனர். மூன்று தளங்கள் மற்றும் ஏழு தளங்கள் என, இரு கட்டடங்கள் உடையதாக, புதிய தலைமையகம் அமைந்துள்ளது. இந்த கட்டடங்களுக்கு நடுவில் ஒரு பூங்காவும், கட்சியின் தேர்தல் சின்னமான, தாமரையின் வடிவில் சிறிய குளமும் அமைக்கப்பட்டு உள்ளது.

மூன்று தளங்கள் உடைய, முக்கிய அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில், கட்சி தலைவருக்கும், பார்லிமென்டின், இரு சபைகளின் கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலர்களுக்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும், அமித் ஷா பார்க்க முடியும். கட்சியின், எம்.பி.,க்கள் கூட்டம் நடத்துவதற்கான வசதியும், புதிய வளாகத்தில் உள்ளது. இங்கு, 450 பேர் மற்றும், 150 பேர் அமரக் கூடிய வசதியுடன் கூடிய, இரு கருத்தரங்க கூடங்கள் உள்ளன. கார்கள் நிறுத்துவதற்காக, தரைக்கு அடியில் இரண்டடுக்கு, ‘பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பசுமை கட்டடமாக அமையும் வகையில், அதிக வெளிச்சம் கிடைக்கும் வகையில், அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கான வசதி, மேல்தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநில தலைமை அலுவலகங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதியுடன், இந்த புதிய தலைமையகம் முழுவதும், ‘வை - பை’ வசதி செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்