மார்ச்சில் திரைக்கு வரும் ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் | அடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா | தமிழ் சினிமாவில் விவசாய டிரண்ட் | சல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன் | தனுஷ் இயக்கும் படத்தில் சுதீப் | மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ் | அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த் | 'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ? | பிரபலங்களையும் ரசிக்க வைக்கும் பிரியா வாரியர் | டப்பிங் பேசாதது ஏன்? - அனுஷ்கா |
ப.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி, நடிக்கும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கிறது. இதனால், முன்னணி தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகிய இருவரில் ஒருவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது தான் இயக்கும் புதிய படத்தில் ஒரு லீடு ரோலில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ். சமீபத்தில் பெங்களூர் சென்று சுதீப்பை சந்தித்த தனுஷ், அவரிடம் கதையை சொல்லி ஓகே செய்து விட்டாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
தனுஷின் ப.பாண்டி படத்தை கன்னடத்தில் சுதீப் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.