ரயில்களை அதிக வேகமாக இயக்குவதற்கு புதிய ரயில் வழித்தடங்கள்: அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

2018-02-14@ 11:52:50

டெல்லி: புதிதாக அறிமுகமாகவுள்ள அதிவேக ரயில்களுக்காக 10,000 கி,மீ தூரத்துக்கு புதிய ஹை ஸ்பீட் வழித்தடத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மணிக்கு 200 முதல் 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

இதற்கான வழித்தடங்களை கண்டறிந்து ரயில் பயண செலவுகளை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே வாரியத்துக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் மீது தூண்கள் அமைத்து ரயில் பாதைகளை அமைப்பது குறித்தும், தற்போது உள்ள ரயில் தடங்கள் மீது தூண்கள் அமைத்து புதிய அதிவேக ரயில் பாதைகளை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!