SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை அருகே இன்று அதிகாலை பரபரப்பு: ஓடும் ரயிலில் இளம் ஜோடி முத்தமழை: பயணிகள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சி

2018-02-14@ 19:46:23

நாகர்கோவில்: திருநெல்வேலி-கன்னியாகுமரி பயணிகள் ரயிலில் இன்று அதிகாலை ஒரு இளம் ஜோடி காதலர் தினத்தை கொண்டாடியது. இந்த ஜோடியின் காதல் விளையாட்டை பார்த்து ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் வாயடைத்து போய்விட்டனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: திருநெல்வேலியில் இருந்து தினசரி அதிகாலை சுமார் 6.30 மணிக்கு கன்னியாகுமரி வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையம், நான்குநேரி, வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி, தோவாளை வழியாக காலை சுமார் 8.40 மணிக்கு நாகர்கோவிலை இந்த ரயில் வந்தடைகிறது. அதிகாலை வேலைக்கு செல்கின்றவர்கள் மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 7.25 மணிக்கு பயணிகள் ரயில் நாங்குநேரி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியின் சீருடையை அணிந்திருந்த மாணவனும், மாணவியும் ஏறினர். இருவருக்கும் சுமார் 22 வயதுதான் இருக்கும். அவசரம்... அவசரமாக... இருவரும் ஆள் இல்லாத பெட்டியை தேடி கண்டுபிடித்து அமர்ந்து கொண்டனர். இருவரும் சற்று கேப் விட்டு அமர்ந்து இருந்தை பார்க்க முடிந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டனர். திடீரென அருகருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். இதனால் ஏதோ நடக்க போகிறது என்ற எண்ணத்தில் ரயிலில் பயணித்த மற்ற பயணிகளும் இவர்களை உற்று கவனிக்க தொடங்கினர்.

ஆனால் இளம் ஜோடி எதை பற்றியும் கண்டு கொள்ளவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாணவன் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கினார். மாணவியும் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் இறுக கட்டிபிடித்தவாறு முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். இளம் ஜோடியின் இந்த செயலை ரயிலில் பயணம் செய்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். இருப்பினும் ஒன்றும் தெரியாதது போல் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். ஆனால் மாணவி அதிர்ச்சியில் உடைந்து விட்டார். இதனால் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டார்.

இந்த நேரத்தில் இளம் ஜோடி இறங்க வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. ரயிலும் நின்றது. இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் ரயிலில் இருந்து வேக வேமாக இறங்கிய இளம் ஜோடி புத்தக பையுடன் கல்லூரிக்கு செல்லும் காடு வழியாக ஓட்டம் பிடித்து. காதலர் தினத்தில் ஓடும் ரயிலில் அதிகாலை வேளையில் இளம் ஜோடிகள் சரமாரியாக முத்தமழை பொழிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

  • Christianslent

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்