வறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் உதவி | மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு | காதலர் தினத்தில் ரசிகர்களை ஈர்த்த சினிமாக்காரர்கள் | சினிமாவிற்கு கமல் குட்-பை | நானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன் | சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சி | 'மாரி 2' படத்தில் இணைந்த வரலட்சுமி | மீண்டும் வந்தார் மமதி சாரி | பிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன் | 40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தயாரான தமிழ் படம் |
பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா இணையும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடிக்காத சிலர் நடிக்கிறார்கள்.
முதல் பாகத்தில் இடம் பெறாத புதிய கதாபாத்திரங்களும், புதிய நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளார்கள். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். இரண்டாவது நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார். முதல் பாகத்தில் இடம் பெற்ற ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். மலையாள நடிகரான டொவினோ தாமஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
'சண்டக் கோழி 2, கன்னிராசி, எச்சரிக்கை, மிஸ்டர் சந்திரமௌலி,' ஆகிய படங்களிலும் நடித்து வரும் வரலட்சுமியின் இந்த வருட பட எண்ணிக்கையில் 'மாரி 2' படமும் சேர்ந்துள்ளது. அவர் தனுஷுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்ற வேகத்துடன் படக்குழு செயல்பட்டு வருவதாகத் தகவல்.